#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது... அரசு ஊழியர்களை எச்சரித்த அதிகாரி
நகைச்சுவை நடிகரும் சிறந்த சமூக சேவகருமான விவேக் காலமானார்
கொரோனா தொற்று : தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ). பரபரப்பு தகவல்கள்
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
தமிழ்நாட்டில் 540-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.
என்ஜினீயரிங் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் 2018-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரிகள் வாரியாக உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்? அவர்களில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சி விகிதம் எவ்வளவு? ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 682 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.
59 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொண்ட கல்லூயில் கூட 85.57 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை