June 18, 2019 Tuesday 10.41 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : May 16 2019 6:35 PM

அமெரிக்காவில் தேசிய நெருக்கடி நிலை பிரகடனம் - அதிபர் டிரம்ப் அதிரடி

Posted Date : May 16 2019 6:35 PM

 வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்க கணினி தொலைதொடர்புகளை பாதுகாக்கும் வகையில் தேசிய நெருக்கடி நிலையை பிறப்பித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

ஹுவாய் நிறுவனம் தயாரிக்கும் மென் பொருள்களை பயன்படுத்தி சீனா தனக்கான தகவல்களை உளவு பார்த்து வருவதாக பல நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன. இந்நிலையில் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுச் சார் விவகாரங்கள் திருடப்படுவதும் உளவு பார்க்கப்படுவதும் தடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேசிய நெருக்கடி நிலையை பிறப்பித்து டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

இந்த நெருக்கடி நிலையால் வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களை பயன்படுத்தி கொள்வது தடுக்கப்படும். எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்ற போதிலும் சீனாவில் Huawei தொலைதொடர்பு நிறுவனத்தை முடக்கவே இந்த உத்தரவை அவர் பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட உடன் Huawei நிறுவனம் மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை அதற்கான பட்டியலில் இணைத்து அமெரிக்க வர்த்தக துறை இணைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா அரசின் சிறப்பு அனுமதியை பெறாமல் Huawei நிறுவனம் அமெரிக்கா தொழில்நுட்பங்கள், கருவிகள், பாகங்களை வாங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை