June 18, 2019 Tuesday 11.12 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : May 20 2019 5:57 PM

சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு  - காவல்துறை சோதனை

Posted Date : May 20 2019 5:57 PM

 சென்னை தலைமைச் செயலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக மாலை 4  மணிக்கு, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் எஸ்.பி-க்கள் பங்கேற்று இருந்தனர்.

தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். கடிதம் மூலம் மிரட்டல் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. தலைமை செயலகத்தை சுற்றிலும் காவல்துறை குவிக்கப்பட்டது. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடைபெற்று வருகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை