August 11, 2020 Tuesday 02.34 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : May 28 2019 1:22 PM

தர்பாரை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தயாராகும் ரஜினி: ரஜினி-சிறுத்தை சிவா திடீர் சந்திப்பு

Posted Date : May 28 2019 1:22 PM

விஸ்வாசம் பட இயக்குநர் சிவா ரஜினிகாந்தை சந்தித்து புதிய படத்துக்கான கதை சொல்லியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பேட்ட. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்தப் படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் - முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு நாளை மும்பையில் துவங்க உள்ள நிலையில் இன்று ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இருவரிடையேயான சந்திப்பு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்துக்கு புதிய கதை ஒன்றை இயக்குநர் சிவா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்திருந்தார். அவரைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஹெச்.வினோத்திடமும் கதை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை