October 20, 2020 Tuesday 11.27 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : May 31 2019 9:49 AM

தமிழகத்தில் மின்வாரியத்திலும் வடமாநிலத்தவர்கள் நியமனம்!

Posted Date : May 31 2019 9:49 AM

தமிழக மின்வாரிய பணிகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் நடத்திய தேர்வில் 45,000 பேர் எழுதினர். 325 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் ஆந்திரா, உத்திரபிரதேசம், ராஜஸ்தானை சேர்ந்த 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் தெரியாதோர் தேர்வில் வென்று பணியில் சேர்ந்திருப்பதால் மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மத்திய அரசின் துறைகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்ள பணி காலியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சமீபத்தில் தமிழ்நாட்டில் ரயில்வே துறை பழகுநர் இடங்களுக்காக 7000 பேரிடம் நேர்காணல் நடைபெற்றதாகவும், அதில் வெறும் 400 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் மற்றவர்கள் வெளிமாநிலத்தவர் என்று தகவல்கள் வெளியானது. 

தமிழகத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களில் 15-20% பேர் தமிழ் தெரியாதவர்கள். இவர்களின் சதவிகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் தென்னக ரயில்வேயால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் அல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்டு வருகிறது. 

இதே போல் அஞ்சல் துறையிலும் வெளிமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மின்வாரிய பணிகளிலும் வெளிமாநிலத்தை சேர்ந்த 37 பேர் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை