September 25, 2020 Friday 02.42 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jun 18 2019 10:39 AM

எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த தடை!

Posted Date : Jun 18 2019 10:39 AM

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

இவ்விரு அணிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடக்க இருப்பதாக இருந்தது.

தற்போது அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

அந்த இடம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் நடிகர் சங்க தேர்தல் வேறு இடத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை