September 25, 2020 Friday 03.05 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jun 23 2019 5:22 AM

தொடங்கியது நடிகர் சங்க தேர்தல்!

Posted Date : Jun 23 2019 5:22 AM

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

2019-2022ம் ஆண்டுக்கான நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பல்வேறு பிரச்னைகளுக்கிடையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.. நாசர் தலைமையில் பாண்டவர் அணி, கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகின்றன. மொத்த வாக்குகள் 3,644. இதில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எண்ணிக்கை 3,171. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

வெளியூரில் இருப்பவர்கள் நேற்றே சென்னைக்கு வந்து விட்டனர். தேர்தலையொட்டி இன்று ஒருநாள் அனைத்து தமிழ் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Comments Here

  • Ezhilarasu Jun 23,2019 | 07:39 AM

    நாட்டுக்கு ரொம்ப தேவை.