June 16, 2021 Wednesday 09.54 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 1 2019 7:52 AM

நிறைய மரம் இருக்கும்போது ஊட்டியில் ஏன் மரம் நடுகிறீர்கள்? என்ற ரசிகரின் கேள்விக்கு விவேக் பதில்!

Posted Date : Jul 1 2019 7:52 AM

நிறைய மரம் இருக்கும்போது ஊட்டியில் ஏன் மரம் நடுகிறீர்கள்? என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகர் விவேக் பதில் அளித்துள்ளார்.

நடிகர் விவேக் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி மரங்கள் நடும் சமூக பணிகளையும் செய்து வருகிறார். இன்று ஊட்டிக்கு அருகில் உள்ள எல்ல நள்ளி என்ற இடத்தில் ஆட்சியருடன் இணைந்து மரங்கள் நடும் பணியில் ஈடுபடப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு வெற்றிமாறன் என்பவர், "ஊட்டியில் ஏற்கனவே நிறைய மரங்கள் இருக்கிறது, மரங்கள் இல்லாத இடத்தில் உங்கள் பணியை மேற்கொள்ளுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்" என்று பதிவிட்டுருந்தார்.

வெற்றிமாறனின் பதிவுக்கு நடிகர் விவேக், "ஊட்டியில் நிறைய மரங்கள் இருக்கலாம். ஆனால் மழை இல்லை. காரணம் யூக்கலிப்ட் சில்வர்ஓக், கிருத்துமசு மரங்களால் மழையை ஈர்க்க முடியாது. அவை நிலத்தடி நீரை உரிஞ்சுவதோடு அதை ஆவியாக்குவதும் இல்லை. மலை நாட்டு மரங்கள் நடப்பட வேண்டும்" என்று பதிலளித்துள்ளார்

Comments Here

  • RAJA Sundar Jul 03,2019 | 05:48 AM

    Kalvie katpadhu sulabam