August 23, 2019 Friday 06.51 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 9 2019 11:58 AM

உலகக்கோப்பை முதல் அரையிறுதியில் இந்திய-நியூசிலாந்து இன்று மோதல்! 

Posted Date : Jul 9 2019 11:58 AM

உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் இன்று இந்தியா , நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற லீக் சுற்றின் முடிவில் இந்திய, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறின.

இன்று மான்செஸ்டர் நகரில் நடக்க உள்ள முதல் அரையிறுதி போட்டியில் 15 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ள இந்தியாவும், 11 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. 

மான்செஸ்டர் நகரில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை மழையால் போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால் மீண்டும் நாளை போட்டி நடைபெறும். நாளையும் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் நேரடியாக இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறும். 

மான்செஸ்டர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். எனவே டாஸ் வென்று பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை