January 23, 2020 Thursday 10.53 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 9 2019 12:34 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் 6வது முறையாக உலக சாம்பியன் - திருச்சி பெண் சாதனை!

Posted Date : Jul 9 2019 12:34 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று திருச்சியை சேர்ந்த பெண் ஜெனிதா ஆண்டோ சாதனை படைத்துள்ளார்.

ஸ்லோவாக்கியா நாட்டில், கடந்த ஜூன் 28 ஆம் தேதியிலிருந்து ஜூலை 6-ம் தேதி வரை 19-வது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 12 நாடுகளைச் சேர்ந்த 44 வீரர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், பெண்களுக்கான செஸ் பிரிவில் திருச்சி பொன்மலை பட்டியைச் சேர்ந்த ஜெனிதா ஆண்டோ தங்கப்பதக்கம் வென்று, 6வது முறையாகத் தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார். 

நேற்று திருச்சி வந்த ஜெனிதா ஆண்டோவுக்கு விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். அதைத் தொடர்ந்து ஜெனிதா ஆண்டோ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மாற்றுத் திறனாளிகளுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தவருடம் நடைபெற்ற 19வது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 44 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த முறை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய வீரர்கள் கூடுதலாக கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 5 வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்தப் போட்டியில் பெண்களுக்கான செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளேன். உலகக் கோப்பை போட்டியில் ஆறாவது முறையாக நான் பெற்றுள்ள தங்கப்பதக்கம் இது.

இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட எனது தந்தை, உதவிய எனது பயிற்சியாளர் சுந்தர்ராஜன், நண்பர்கள் உறவினர்கள் செஸ் விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். வரும் 2020 இதில் நடக்க இருக்கும், ஆசிய கிராண்ட் மாஸ்டர் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதுதான் என் வாழ்நாள் லட்சியம். அதற்காகத் தொடர்ந்து பயிற்சி எடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை