August 23, 2019 Friday 07.38 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 10 2019 6:59 PM

ஜடேஜாவின் மாயாஜால ஆட்டம் வீண்: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!

Posted Date : Jul 10 2019 6:59 PM

ஜடேஜாவின் மாயாஜால ஆட்டத்தால் இறுதிவரை சென்ற இந்திய அணி போராடி தோல்வி அடைந்ததால் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற இருந்தது. மழையால் போட்டி தடைபட்டதால் இன்று போட்டி தொடர்ந்து நடைபெற்றது. நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்களை எடுத்து இந்தியாவுக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

எளிதாக இந்திய அணி வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ரிஷப் பந்த், பாண்டியவும் நீண்ட நேரம் தாக்கு பிடிக்கவில்லை. 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் தோனியும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர்.

தோனி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடித்து அசத்திய ஜடேஜாவின் பல கேட்சுகளை நியூசிலாந்து அணி வீரர்கள் தவறவிட்டனர்.

இறுதிக்கட்டத்தில் ஜடேஜா ஆட்டமிழக்க பாதி நம்பிக்கை போனது. 49 வது ஓவரில் தோனி சிக்ஸ் அடிக்க மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதே ஓவரில் ரன் அவுட் ஆனார் தோனி. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ 221 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழந்தது.

இதன்மூலம் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை