August 11, 2020 Tuesday 03.17 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 11 2019 7:59 AM

குரூப் 4 தேர்வுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted Date : Jul 11 2019 7:59 AM

குரூப் 3 மற்றும் குரூப் 4 போன்ற அடிப்படை அரசு பணி தேர்வுகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்த தேர்வர் ஒருவர் தனது மனுவில், தான் தேர்வில் வெற்றி பெற்றும் அதிகம் படித்திருப்பதாக கூறி தனக்கு வேலை வழங்கவில்லை. எனவே தனக்கு உதவியாளர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குரூப் 3 மற்றும் குரூப் 4 போன்ற அடிப்படை அரசு பணி தேர்வுகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க நிர்வாக துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள் கூறியதாவது:

அடிப்படை அரசு பணிகளுக்கு வேலைவாய்ப்பின்மை காரணமாக பட்டதாரிகளே அதிகம் விண்ணப்பிக்கின்றனர். இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் இதுதான் நடக்கிறது. இதனால் உயரதிகாரிகள் கடைநிலை பணியாளர்களை வேலை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. நீதிமன்றங்களிலும் இதே நிலை உள்ளது. அதுமட்டுமின்றி டிகிரி முடித்தவர்கள் குரூப் 4 போன்ற கடைநிலை பணிகளில் சேர்ந்தால் அவர்கள் சரிவர வேலையில் கவனம் செலுத்தாமல் மற்ற போட்டி தேர்வுகளுக்கு படிக்கின்றனர்.

எனவே மூன்று மாதத்திற்குள் குரூப் 3 மற்றும் குரூப் 4 போன்ற அடிப்படை அரசு பணி தேர்வுகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை