August 11, 2020 Tuesday 03.51 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 12 2019 7:34 AM

இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி - இருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பரபரப்பு! 

Posted Date : Jul 12 2019 7:34 AM

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு 3 பேர் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் இருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இயக்குனர் சங்கத் தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, ரத்தன் கணபதி, வித்யாசாகர் ஆகிய  மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 9 மற்றும் 10ஆம் தேதிகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இவற்றின் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது இதில், தலைவர் பதவிக்கு 3 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 12 பேரும் போட்டியிடுகின்றனர். பொதுச் செயலாளர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். ஜூலை 12ஆம் தேதி (இன்று) வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள். நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். 

இதனிடையே, தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அமீர் மற்றும் ஜெகநாதன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர்களது ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை