January 23, 2020 Thursday 10.17 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 17 2019 7:28 PM

தோனி வேண்டுமென்றே சரியாக ஆடவில்லை - யுவராஜ் சிங் தந்தை குற்றச்சாட்டு!

Posted Date : Jul 17 2019 7:28 PM

உலக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி வேண்டுமென்றே சரியாக விளையாடாமல் இருந்தார் என முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தோனி வேண்டுமென்றுதான் நியூசிலாந்து அணியின் டார்கெட்டை கடக்க அணிக்கு உதவவில்லை. இந்திய அணியில் தன்னைத்தவிர, மற்ற எந்த கேப்டனும், உலகக் கோப்பையைப் பெற்று, பெருமையை சம்பாதித்துவிடக் கூடாது என்பதுதான் தோனியின் எண்ணம். தோனி தனது வாய்ப்புகளை வேண்டுமென்று பயன்படுத்தாமல் மறுத்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தோனி மீது யோகராஜ் ஏற்கனவே பலமுறை குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை