August 23, 2019 Friday 06.52 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 20 2019 5:13 PM

இந்திய அணியிலிருந்து விலகினார் தோனி: ராணுவத்துக்கு செல்கிறார்!

Posted Date : Jul 20 2019 5:13 PM

மே.இ.தீவுகள் உடனான தொடரிலிருந்து விலகியுள்ள தோனி, அடுத்த மாதத்திற்கு தனது நேரத்தை ராணுவத்தில் செலவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு இந்திய தீவுக்கு சென்று அந்நாட்டு அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. மேற்கு இந்திய தீவுக்கு செல்லும் அணி வரும் ஞாயிறு அன்று தேர்வு செய்யப்படுகிறது. இந்தத் தொடரில் தோனி இடம்பெறுவாரா என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

இந்நிலையில் தோனி  மேற்கிந்தியத் தொடரில் தனது பெயரை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும், அடுத்த இரண்டு மாதங்கள் ராணுவத்தில் தனது நேரத்தைச் செலவிட இருக்கிறார் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்திய ராணுவத்தில் தோணி கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தோனி இடம்பெறாத பட்சத்தில் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை