August 23, 2019 Friday 07.19 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 22 2019 2:58 PM

கழிவறையை சுத்தம் செய்யவா நான் எம்.பி-யானேன்? - பிரக்யா சிங் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

Posted Date : Jul 22 2019 2:58 PM

உங்கள் கழிவறையை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை; அதைச் சரியாக தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் என்று பிரக்யா சிங் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யாக உள்ளவர் பிரக்யா சிங் தாகூர். சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் மீது குண்டுவெடிப்பு வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் போபால் தொகுதிக்குட்பட்ட பாஜக தொண்டர் ஒருவர் சமீபத்தில் பிரக்யாவுக்கு போன் செய்து தனது பகுதியில் சுகாதாரத்தின் நிலை மிக மோசமாக உள்ளது எனக் கூறியுள்ளார். இந்தப் புகார் குறித்து செஹோர் பகுதியில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பிரக்யா, "உங்கள் கழிவறையை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதைச் சரியாக தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். நான் என்ன காரணத்துக்காக எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டேனோ அதை சிறப்பாகச் செய்வேன். 

ஒரு எம்.பி என்ற முறையில் எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தொகுதியின் மேம்பாட்டை உயர்த்த வேலை செய்வேன். உங்களின் குறைகளை லோக்கல் பிரதிநிதிகளை வைத்து தீர்த்துக்கொள்ளுங்கள். அதைவிடுத்து எனக்கு அடிக்கடி போன் செய்வதை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று பேசினார்.

இந்தக் காட்சிகள் வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. மக்கள் பனி செய்யத்தானே எம்.பி.யாகவுள்ளார். பொதுமக்களிடத்தில் எப்படி பேச வேண்டும் என்று கூட தெரியாதவர் எல்லாம் எம்.பி.யா? என்று வலைதளவாசிகள் சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் நாதுராம் கோட்சே குறித்த கமலின் பேச்சுக்குப் பதிலளித்த பிரக்யா, "நாதுராம் கோட்சே ஒரு தேசப்பக்தராக இருந்தார். இருக்கிறார். இன்னும் இருப்பார். அவரைத் தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி தரப்படும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை