January 23, 2020 Thursday 09.15 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 22 2019 3:46 PM

அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!

Posted Date : Jul 22 2019 3:46 PM

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அனேக இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இடைவெளிவிட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. தாம்பரத்தில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு கடல் சீற்றம், பலத்த காற்று வீசும் என்பதால் தென் கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும்.  

இவ்வாறு அவர் கூறினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை