August 23, 2019 Friday 07.24 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 22 2019 8:21 PM

அத்திவரதரை மீண்டும் புதைக்க கூடாது - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி!

Posted Date : Jul 22 2019 8:21 PM

40 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு காட்சி அளித்துவரும் அத்தி வரதராஜ மீண்டும் புதைக்க கூடாது என்று அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அந்தக் காலத்தில், பயத்தால் அத்திவரதரைப் புதைத்தனர். அத்திவரதரை தரிசிக்க தற்போது நிறைய பேர் வருகின்றனர். அத்திவரதரை வெளியே எடுத்ததால் தான் ஆங்காங்கே மழை பெய்கிறது. ஸ்ரீகிருஷ்ண பிரேமி சுவாமிகளை ஆசிரமத்தில் சந்தித்தோம். 48 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் மீண்டும் மேலே வந்துள்ளார். இது ஆகமம், சாஸ்திரத்தில் கிடையாது.

இந்த அத்திவரதர்தான் ஆதிசங்கரர், ராமானுஜர், தேசிகரிடம் பேசியுள்ளார். அந்தக் காலத்தில் இருந்த சூழ்நிலையால் விக்கிரகங்களை ஆங்காங்கே ஒளித்துவைக்க வேண்டியிருந்தது. அதனால், அத்திவரதரைக்கூட பூமியில் புதைத்து மறைத்து வைத்தனர். இப்போது அந்தப் பயம் இல்லை. சேற்றிலோ, தண்ணீரிலோ ஏன் கஷ்டப்பட வேண்டும். பூஜை செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை.

அதே இடத்தில் வைத்து அவரை வழிபட்டால், காஞ்சிபுரம்கூட திருப்பதி ஆகிவிடும். எனவே, விக்கிரகத்தை புதைக்க வேண்டாம். திருக்கோயிலூர் ஜீயர் சுவாமிகளும் புதைக்கக்கூடாது என கடிதம் கொடுத்துள்ளார். நிறைய மடாதிபதிகள் கடிதம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் காற்றுபுகாத இடத்தில் அத்திவரதரை வைக்கவேண்டிய அவசியமில்லை. உலக கஷ்டங்களை நீக்கத்தான் மேலே எழுந்து தன்னை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார். மக்களிடம் நல்ல விஷயங்களைக் கொண்டுசேர்ப்பதற்காக வந்துள்ளார்.

தற்போது உள்ள அதே இடத்தில் வைக்கலாம். அல்லது வேறு இடத்தில் வைத்து பூஜை செய்யலாம். `என்னை மீண்டும் புதைக்கப் போகிறாயா? புதைக்க வேண்டாம்' என ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் கனவில் தோன்றி அத்திவரதர் அழுதார். எனவே, மீண்டும் புதைக்கக்கூடாது என அனைத்து மடாதிபதிகளும் சேர்ந்து முதல்வரை சந்தித்துப் பேச உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை