August 23, 2019 Friday 06.39 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 22 2019 9:05 PM

4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை - ஜெகனின் அடேங்கப்பா ஆர்டர்!

Posted Date : Jul 22 2019 9:05 PM

முதன்முறையாக முதல்வரான  இரண்டு மாதங்களில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி அசத்தி வருகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

இந்நிலையில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, பணி நியமனத்தை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வழங்கவுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிராமங்களில் வாழும் மக்களில் 4000 பேருக்கு ஒரு கிராம தலைமைச் செயலகம் என அமைக்கப்பட்டுள்ளது. அதில், 50 வீடுகளுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ளது. அவர், அந்த வீடுகளில் ரேஷன் கார்டு போன்ற நலத்திட்டத் தேவைகளை அந்தந்த துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.

இதேபோன்று, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். கிராம தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர்களுக்கு 10-ம் வகுப்பு கல்வித் தகுதியாகவும், ரூ.5000 சம்பளமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள செயலகங்களில் பணி புரிபவர்களுக்கு, பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகவும் ரூ.15,000 சம்பளமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வரின் இந்தப் புதிய திட்டம் மூலம், கிராமங்களில் உள்ள 99,494 பேருக்கும், நகரங்களில் 34,345 பேருக்கும் வேலை கிடைக்கிறது. மேலும், தற்போது அரசுப் பணியில் உள்ள 1,33,494 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது. துப்புரவுத் தொழிலாளர்களின் பணி நிரந்தரமாக்கப்பட்டு, அவர்களின் சம்பளம் ரூ.18,000 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் சுமார் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு, அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி அன்று பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை