November 12, 2019 Tuesday 04.11 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 25 2019 5:41 PM

சான்று வழங்க லஞ்சம் கேட்ட மருத்துவர் - வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்!

Posted Date : Jul 25 2019 5:41 PM

கன்னியாகுமரி மாவட்டம் செந்தறை அரசு மருத்துவமனையில் சான்று அளிப்பதற்காக அரசு மருத்துவர் லஞ்சம் கேட்டதாக கூறி மக்கள் பாதை அமைப்பினர் வீடியோ ஆதாரத்துடன் நாகர்கேவில் இலஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இனயம் கடலோர கிராமத்தை சேர்ந்த சம்நத் என்பவர் ஆதார் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்காக ஆதார் மையத்தை அணுகியபோது, மருத்துவர் சான்று கேட்டுள்ளனர். அதையொட்டி, அவர் செந்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவரிடம் அணுகி சான்று கேட்டுள்ளார். 

அப்போது, அரசுமருத்துவர் லஞ்சம் கேட்டதாகவும் தர மறுத்தபோது அங்கிருந்த பணியாளரும் மருத்துவருக்கு ஆதரவாக பேசி சம்நத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது சம்நத் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

லஞ்சம் கேட்டதால் ஆத்திரமடைந்த சம்நத் மக்கள் பாதை அமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று மக்கள் பாதை அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சகாய சதீஷ், ஜெயராஜ், மெல்கின், ஜெரின் ஆகியோர் நாகர்கோவிலில் இலஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளரிடம் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாருடன் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவும் அளிக்கப்பட்டுள்ளது.
 

 

Comments Here

  • Saheesh M Jul 30,2019 | 10:50 AM

    Well done!!!. Appreciate his courage for asking bold and straight forward questions. What will be the action been taken on such money greedy culprits?.