#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது... அரசு ஊழியர்களை எச்சரித்த அதிகாரி
நகைச்சுவை நடிகரும் சிறந்த சமூக சேவகருமான விவேக் காலமானார்
கொரோனா தொற்று : தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ). பரபரப்பு தகவல்கள்
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
12 ஆயிரம் லஞ்சம் கேட்ட VAO -வை சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் வீடியோ ஆதாரத்துடன கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.
லஞ்சம், ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கம், தமிழ்நாட்டில் நடக்கும் பல லஞ்ச-ஊழல் முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் சுப்பிரமணி குடும்பத்தினர், ஜூன் மாதத்தில், திண்டுக்கல் மாவட்டம் கரிகாளி கிராமத்தில் நிலம் வாங்கியுள்ளனர். 26 ஜூன் 2019 அன்று குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த பிறகு, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக (2 இடங்கள்) 27 ஜூன் 2019 அன்று கரிக்காலி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜை அணுகியுள்ளனர். ஒரு பட்டா பெயர் மாற்றத்திற்கு 6000 ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர், மொத்தம் 12000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்துதரமுடியும் என்று வெளிப்படையாக லஞ்சம் கேட்டுள்ளார்.
இதை தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறையிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அமைப்பு செயலாளர் ஜெய் கணேஷ் மற்றும் சுப்பிரமணி சென்று முறையிட்டபொழுது (10-7-2019), வீடியோ ஆதாரம் வேண்டும் என்று லஞ்சஒழிப்புத்துறை கேட்டுள்ளது. ஜூலை 12,2019 அன்று மீண்டும் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பட்டா மாறுதல் செய்ய கேட்டபொழுது, லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்று தெளிவாக கூறியதை வீடியோ எடுக்கப்பட்டது. மேலும், உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்றும், பேரம் பேசி கடைசியாக 8000 ரூபாய் பெற்றுக்கொண்டு பட்டா பெயர்மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டார். இதை வீடியோ ஆதாராமாக லஞ்சஒழிப்புத்துறையிடம் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தனர்.
இன்று (26/07/2019) காலை 10 மணி லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் அளவில் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்துள்ளனர்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை