November 12, 2019 Tuesday 04.05 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jul 27 2019 7:15 PM

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகள் எரிந்து நாசம் - அலறியடித்து ஓடிய பயணிகள்!

Posted Date : Jul 27 2019 7:15 PM

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்து ஓடினர். ஆதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்கென தனியாக நிலையம் அமைந்துள்ளது. இங்கு டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 ஆம்னி பஸ்களில், இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள பயணிகள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். 

தீ மளமளவென பரவி 3வது பஸ்சையும் நெருங்கிய நிலையில், தகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீ பரவாமல் பார்த்துக் கொண்டனர். இருப்பினும் 2 ஆம்னி பஸ்களும் முழுவதும் எரிந்துவிட்டன. 

இந்த தீவிபத்தில், பயணிகள் யாருக்கும் தீக்காயம் உள்ளிட்ட எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை