January 25, 2020 Saturday 01.07 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Aug 9 2019 4:09 PM

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் பழனிச்சாமி!

Posted Date : Aug 9 2019 4:09 PM

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை வட மாநிலங்களில் தீவிரமாகி கொட்டி வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வரலாறு காணாத அளவிற்கு நேற்று முன்தினம் மட்டும் 91 செ.மீ. மழை பெய்துள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிட்டத்தட்ட்ட மூன்றாயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 5 பேர் மழை வெள்ளத்திற்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதனிடையே தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 2 நாட்களுக்கு தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனத்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை