October 22, 2019 Tuesday 06.21 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Aug 17 2019 12:14 PM

அந்த கிரீன்லாந்து தீவு எவ்வளவு? - விலைக்கு கேட்கும் டிரம்ப்!

Posted Date : Aug 17 2019 12:14 PM

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை விலைக்கு வாங்க, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடல் பகுதிகளுக்கு இடையில் உள்ள தீவு கிரீன்லாந்து. பொருளாதாரரீதியாக டென்மார்க்கை சார்ந்திருந்தாலும், கிரீன்லாந்து தன்னாட்சி அதிகாரம்கொண்டது. அதன் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை டென்மார்க் பார்த்துக்கொள்ளும். 

டென்மார்க்கின் கோபன்ஹேஹனில் வரும் செப்டம்பரில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்துகொள்ள இருக்கிறார். அவர், தனது கோபன்ஹேஹன் பயணத்தின்போது, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்களையும் நேரில் சந்தித்துப் பேச இருக்கிறார்.

இந்த நிலையில் கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவதுகுறித்து தன்னுடைய ஆலோசகர்களுடன் ட்ரம்ப் விவாதித்ததாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவலை முதன்முதலில் அமெரிக்க பத்திரிகையான 'வால்ஸ்டிரீட் ஜர்னல்' வெளியிட்டது. ட்ரம்ப் பேசியதைக் கேட்ட ஆலோசகர்கள் சிலர், அவர் விளையாட்டாகக் நினைத்துள்ளனர். அதன்பிறகுதான் தீவிரமாக விவாதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தங்கள் நாட்டை விலைக்கு வாங்குவதுகுறித்து அமெரிக்க அதிபர் ஆலோசனை நடத்துவதாக வெளியான தகவலை கிரீன்லாந்து மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் விரும்பவில்லை.

இதுகுறித்து 'தி ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்திடம் பேசிய கிரீன்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன் லோன் (Ane Lone), "எங்கள் கதவுகள் வியாபார வாய்ப்புகளுக்காக எப்போதும் திறந்திருக்கும். ஆனால், எங்கள் நாடு விற்பனைக்கல்ல’’ என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம், சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை