September 20, 2019 Friday 08.43 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Aug 23 2019 11:47 AM

கோவையில் 6 பயங்கரவாதிகள்? - புகைப்படம் வெளியீடு; தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!

Posted Date : Aug 23 2019 11:47 AM

தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல் கூறிய நிலையில், தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 தீவிரவாதிகளும் கோவை பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு திடீரென மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பி களுக்கும் வாகன சோதனை மற்றும் சுங்கச்சாவடி சோதனையில்  ஈடுபடுமாறு டிஜிபி அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளார்.

சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட  சென்னையின் முக்கிய பகுதிகளிலும், அனைத்து மாநகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள், தேவாலயம், மசூதிகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உக்கடம் ,கோட்டைமேடு, குனியமுத்தூர், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை