September 20, 2019 Friday 09.12 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Aug 23 2019 5:52 PM

இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது - பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு!

Posted Date : Aug 23 2019 5:52 PM

இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். முதலில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள சாண்டோரின் அரண்மணையில் அதிபர் மேக்ரானுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தீவிரவாதம், பருவநிலை மாற்றம், சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. 

காஷ்மீர் பிரச்சனை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது 3வது நாட்டின் தலையீடு இல்லாமல் காஷ்மீர் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள அதிபர் மேக்ரான் யோசனை வழங்கினார். தொடர்ந்து பிரான்ஸ் பிரதமர் எடோ பிலிப்புடன் மோடி ஆலோசனை நடத்தினார். 

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ரபேல் போர் விமானிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு வழங்கவேண்டிய 36 ரபேல் போர் விமானங்களில் முதல் விமானம் வழங்க அதிபர் மேக்ரான் ஒப்புதல் வழங்கினார். 

இதனிடையே, 45வது ஜி-7 மாநாடு நாளை பிரான்சில் தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 

இந்த நிலையில், பாரிஸில் உள்ள யுனேஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். இந்தியாவும் பிரான்சும் எப்போதும் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் இணைந்தும் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் புதியதாக தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 

தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. 2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும். அதேபோல தீவிரவாதத்தை இந்தியா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. மக்களுக்கு செய்ய முடியாத பல்வேறு நலத்திட்டங்களை கடந்த 5 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம். புதிய அரசு பதவியேற்ற 75 நாட்களில் துணிச்சலான பல முடிவுகளை எடுத்தது. ஊழல், பயங்கரவாதத்திற்கு எதிராக இதற்கு முன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை