#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது... அரசு ஊழியர்களை எச்சரித்த அதிகாரி
நகைச்சுவை நடிகரும் சிறந்த சமூக சேவகருமான விவேக் காலமானார்
கொரோனா தொற்று : தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ). பரபரப்பு தகவல்கள்
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
மத்திய வரித்துறையில் பணியாற்றும் 22 அதிகாரிகள் ஊழல் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளால் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர்.
மறைமுக மற்றும் கலால்வரிக்கான மத்திய வாரியத்தின் கீழ் வரும் ஜிஎஸ்டி, மற்றும் இறக்குமதி வரிவசூல் பிரிவில் இருக்கும் 22 சூப்பரின்டென்டென்ட் அந்தஸ்து அதிகாரிகள் மீது, ஊழல் மற்றும் இதர குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, 56(ஜே) பிரிவின் கீழ் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 3-வது சுற்று நடவடிக்கையாக 22 அதிகாரிகளை மத்திய அரசுவீட்டுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு முன் ஐஆர்எஸ் அதிகாரிகள் 27 பேர் இதே விதிமுறையின் கீழ் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், " பிரதமர் மோடி சமீபத்தில் சுதந்திரத்தினத்தின் போது ஆற்றிய உரையில், சில வரித்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகள், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, வரிசெலுத்துவோர்களை துன்படுத்துகிறார்கள். நேர்மையானவர்களை இலக்கு வைத்து அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கிறார்கள்.
சமீபத்தில் நாங்கள் சில துணிச்சலான நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்தோம். இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள இயலாது" எனத் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாக்பூர், போபால் மண்டலைச் சேர்ந்த 11 அதிகாரிகளும் இந்த 22 கட்டாய ஓய்வு அதிகாரிகள் பட்டியலில் அடங்குவார்கள். இவர்கள் இந்தூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு சிகரெட் தயாரிப்புக்கு அனுமதி வழங்குவதில் ஏராளமான முறைகேடுகள் செய்தது தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோல டெல்லி, சென்னை, கொல்கத்தா, மீரட், சண்டிகார் மண்டலத்தில் இருந்து தலா ஒரு அதிகாரியும், மும்பை, ஜெய்பூர், பெங்களூரு மண்டலத்தில் இருந்து ஒரு அதிகாரியும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டனர்" எனத் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் இதேபோன்று கமிஷனர் அந்தஸ்தில் இருக்கும் 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் மீது ஊழல், வரிவசூலின்போது லஞ்சம் பெறுவது, கடத்தல், கிரிமினல் குற்றச்சாட்டு போன்றவை இருந்தன.
இதற்குப்பின் 12 ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் மீது ஊழல், பாலியல் குற்றச்சாட்டு, வருமானத்துக்கு அதிகமான சொத்து ஆகிய குற்றச்சாட்டுகள் இருந்தன.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை