November 12, 2019 Tuesday 03.56 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Aug 27 2019 9:36 AM

அமேசான் காட்டு தீயை அணைக்க ஜி 7 நாடுகளின் உதவி தேவையில்லை - பிரேசில்!

Posted Date : Aug 27 2019 9:36 AM

அமேசான் காட்டு தீயை அணைக்க ஜி 7 நாடுகளின் உதவி தேவையில்லை பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார்.

உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவதால், உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

8 நாடுகளில் பரந்து விரிந்துள்ள அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் பிரேசில் மற்றும் பொலிவியாவில் தான் உள்ளன. சர்வதேச  அழுத்தத்தை தொடர்ந்து பிரேசில் அதிபர் போல்சனாரோ காட்டுத் தீயை கட்டுப்படுத்த  இராணுவத்தை ஈடுபடுத்த உத்தரவிட்டார்.

தீயை அணைக்கும் முயற்சியில் 44,000 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் கொட்டுவதற்கு போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க, ரூ.160 கோடி நிதி உதவி வழங்க தயராக இருப்பதாக ஜி 7 நாடுகள் அறிவித்தன. ஆனால், ஜி 7 நாடுகளின் உதவியை பிரேசில் அதிபர் நிராகரித்துள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை