November 12, 2019 Tuesday 03.39 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 14 2019 6:38 PM

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!

Posted Date : Sep 14 2019 6:38 PM

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா - வங்காளதேச அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி சார்பில் அதிக பட்சமாக கரண் லால் 37 ரன்களும் கேப்டன் துருவ் 33 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காள தேசம் அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இதனையடுத்து 7-வது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை