October 22, 2019 Tuesday 08.12 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 19 2019 3:32 PM

இன்று பிகில் இசைவெளியீடு - அரசியல் பேசுவாரா விஜய்?

Posted Date : Sep 19 2019 3:32 PM

விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில்  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விஜய் பேசுவார்  என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக திரைத்துறையில் ரஜினிக்கு அடுத்து உச்சநட்சத்திரமாக உள்ள விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இசை வெளியீட்டு விழாவிற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இது ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதை கடந்து, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் சமீபகாலமாக விஜய் இசை வெளியீட்டு விழாக்களிலும், தனது திரைப்படங்களிலும் அதிரடி அரசியல் கருத்துக்களையும், விமர்சனத்தையும் தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக இதற்கு முன்பு வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி யை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் படம் பெரும் வெற்றி அடைந்தது. மெர்சல் இசை வெளியீட்டு விழாவிலும் அதிரடி கருத்துக்களை தெரிவித்தார்.

சமீபத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி கொள்கை வரைவை சூர்யா மற்றும் பலர் கடுமையாக விமர்சித்தனர். பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் விவாதமானது. இந்தி மொழி குறித்து அமித்ஷா தெரிவித்த கருத்து சர்ச்சையானது. 

முக்கிய பிரச்சனைகள் குறித்து விஜய் தொடர்ந்து பேசிவருவதால், மேற்குறிப்பிட்ட முக்கியமான பிரச்சனைகள் குறித்து விஜய் இன்று கருத்து தெரிவிப்பார் என்று விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை