October 22, 2019 Tuesday 06.21 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 19 2019 6:57 PM
airforce

இந்திய விமானபடைக்கு புதிய தளபதி நியமனம்!

Posted Date : Sep 19 2019 6:57 PM

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விமானப் படையில் தற்போது துணை தளபதியாக இருப்பவர் ராகேஷ்குமார் சிங் (ஆர்.கே.எஸ்) பதாரியா. 1980-ம் ஆண்டு முதல் விமானப் படையில் சேவையாற்றி வருகிறார் பதாரியா. 2017-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தென்னிந்திய விமான படை பிரிவின் கட்டளை தளபதியாக பணியாற்றினார் பதாரியா. 36 ஆண்டுகால விமானப் படை சேவையில் வாயு சேனா பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 

கடந்த 2019-ம் ஆண்டு விமானப் படை துணை தளபதியாக பதாரியா நியமிக்கப்படார். தற்போது விமானப் படை தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதை தொடர்ந்து புதிய தளபதியை மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை