October 22, 2019 Tuesday 07.36 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 19 2019 8:08 PM

சுபஸ்ரீ மரணம்: பேனர் வைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்கியது அம்பலம்!

Posted Date : Sep 19 2019 8:08 PM

சுபஸ்ரீ மரணமடையக் காரணமாக இருந்த பேனரை வைக்க ஜெயகோபால் மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா 1,000 ரூபாய் லஞ்சம் வழங்கியது தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி, குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் ரேடியல் சாலை அருகே வந்துகொண்டிருந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. இதனால் இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீயின் மீது லாரி ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக அனுமதியின்றி பேனரை வைத்த குற்றத்திற்காக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆடியோ ஆதாரம் ஒன்றின் மூலம் இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான விஜய் என்பவருடன் பேசிய அந்த ஆடியோவில் ‘பேனர் வைப்பதற்காக, மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினேன்’ என்று ஜெயகோபால் தன்னிடம் தெரிவித்ததாக பாஸ்கர் கூறுவது பதிவாகியுள்ளது.

அனுமதி பெற்று பேனர் வைக்குமாறு எச்சரித்த போது மாநகராட்சி ஊழியர்களை ஜெயகோபால் ஏளனமாகப் பேசியதாகவும், அனுமதி வாங்கிவிட்டதாகக் கூறிய ஜெயகோபாலிடம் அனுமதிக்கான சான்றைத் காண்பிக்குமாறு கேட்டதற்கு ‘முடியாது’ என்றுகூறி மறுத்து தங்களை மிரட்டியதாகவும் ஒப்பந்த ஊழியர்கள் கூறுவது அந்த ஆடியோ மூலம் தெரியவந்துள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை