January 25, 2020 Saturday 01.28 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 20 2019 2:47 PM

அவர்கள் மீது மயிரிழை அளவு கூட பயம் இல்லை - கமல் ஆவேசம்!

Posted Date : Sep 20 2019 2:47 PM

தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் டுவீட் செய்துள்ளார்.

மேலும் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டுவிட்டரில் ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றையும் கமல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உலகத்தில் கொடுமையான விஷயம், வாழ வேண்டிய பிள்ளைகளின் மரண செய்தியை அவர்களின் பெற்றோர்கள் கேட்பது தான். சுபஸ்ரீயின் மரண செய்தியும் அப்படிப்பட்டது தான். தனது பெண்ணின் ரத்தம் சாலையில் சிந்திக்கிடப்பதை பார்க்கையில் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் திகிலும் பீதியும் ஏற்படும். பெண்ணை, பெண்களை பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. இந்த மாதிரி பல ரகுக்களும், சுபஸ்ரீக்களும் அரசின் அலட்சியத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கொஞ்சமாவது அறிவு வேண்டாமா? எங்கே பேனர் வைக்கனும், வைக்க கூடாது என்று கூடவா உங்களுக்கு தெரியாது. இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ. எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதும், தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதும் தானே இவர்களுக்கு தெரிந்த அரசியல். இந்த மாதிரி ஆட்சிகள் மீது எனக்கு மயிரிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது. ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள்.

மக்கள் நீதி மையம் உங்கள் சார்பாக கேள்விகள் கேட்டும், அதற்கான தீர்வையும் பெற்றுத் தரும். எங்களை ஆள்கிறவர்களை நாங்கள் தான் தேர்வு செய்யனும். ஆனால் நாங்கள் அடிமைகளாக தான் இருப்போம் என கூறினால் அதை விட பைத்தியக்காரத்தனம் எதுவுமே கிடையாது. உங்களை சாதாரண மக்கள், சாதாரண மக்கள் என்று சொல்லி சொல்லியே என்றும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள் தான் அசாதாரண தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் தின்னமாக உணர்கிறேன். வாருங்கள் தவறுகளை தட்டிக் கேட்போம். புதிய தலைமையை உருவாக்குவோம். 

இவ்வாறு கமல் பேசி உள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை