July 04, 2020 Saturday 04.20 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 20 2019 1:12 PM

உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்: முதல்முறையாக இறுதிக்குள் நுழைந்த இந்திய வீரர் அமித் பங்கல்!

Posted Date : Sep 20 2019 1:12 PM

ஆசியக் குத்துச் சண்டை சாம்பியனான அமித் பங்கல் (52கிலோ) உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் சாகென் பிபோசினோவை 3-2 என்று வீழ்த்தி இந்திய வீரர் அமித் பங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பங்கல் படைத்தார். 

நாளை அமித் பங்கல் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாகோபிதின் சோய்ரவ் என்பவரை இறுதி போட்டியில் எதிர்கொள்கிறார்.

2017 ஆசிய பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலம் வென்றது முதல் அமித் பங்கல் பரவலாக கவன ஈர்ப்பு பெற்றார். இதே ஆண்டில் உலக குத்துச்சண்டையில் காலிறுதி வரை வந்து சாதனை புரிந்தார். மதிப்பு மிக்க பல்கேரியா ஸ்ட்ராண்டியா மெமோரியல் குத்துச் சண்டையில் தொடர்ச்சியாக தங்கம் வென்றார் அமித் பங்கல்.

அதன் பிறகு ஆசியப் போட்டிகளில் 2018-ல் சாம்பியன் ஆனார். ஒலிம்பிக் போட்டிகளிக்கான தகுதி நிலவரப்போட்டிகளில் 49 கிலோ எடைப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு 52 கிலோ எடைப்பிரிவில் இணைந்தார். இதில் ஏற்கெனவே ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றார்.

உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் ஒரே தொடரில் இந்தியா இதுவரை ஒரேயொரு வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை