January 27, 2020 Monday 12.40 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 23 2019 12:16 PM

சோனியா காந்தி, மன்மோகன் சிங் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் சந்திப்பு!

Posted Date : Sep 23 2019 12:16 PM

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி திஹார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தால் கடந்த மாதம் 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் சிபிஐ அவரை கைது செய்தது. 4 முறை சிபிஐ காவலில் வைத்து   விசாரிக்கப்பட்ட பின்னர் கடந்த 5ம் தேதி 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு திகார் சிறையின் 7வது பிளாக்கில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் கடந்த 19-ம் தேதி பிற்பகல் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று காலை 9.30 மணியளவில் காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினர். ப. சிதம்பரம் எதிர்கொண்டு வரும் வழக்கு விசாரணை விவகாரத்தில் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவிக்கும் விதமாக இருவரும் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ப. சிதம்பரத்தை சந்திப்பதற்கு அவரது  மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் திகார் சிறைக்கு வந்திருந்தார்.

தந்தை ப.சிதம்பரம் திகார் சிறையில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், எனது தந்தையை  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சந்தித்து பேசியது இந்த அரசியல் போராட்டத்தில் எங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை