December 11, 2019 Wednesday 04.10 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 25 2019 4:33 PM

பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா!

Posted Date : Sep 25 2019 4:33 PM

பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ஜி ஹியன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று உலக பேட்மின்டன் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். தங்கம் வென்றதற்கு பயிற்சியாளர் கிம் ஜி ஹியன் கூறிய அறிவுரையே முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கிம் ஜி ஹியன் தனது சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருடன் இருந்து பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கிம் ஜி ஹியன் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் திடீர் ராஜினாமா குறித்து பி.வி.சிந்து பேசிய போது, கிம் ஜி ஹியனுக்கு இன்னும் 18 மாத பயிற்சி காலங்கள் முன் அவர் ராஜினாமா செய்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டு வீரர்கள் இதுப்போன்ற செய்திகளை கடந்து செல்வது முக்கியமானது என்றார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை