December 11, 2019 Wednesday 02.32 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 26 2019 12:29 PM

10 கோடி பணம் தரவில்லை: நடிகர் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்!

Posted Date : Sep 26 2019 12:29 PM

உத்தமவில்லன் பட வெளியீட்டின்போது, தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமல்ஹாசன் திரும்பித்  தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகினார். தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றார். 

இந்த நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை. 10 கோடி ரூபாய் பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் மீது பிரபல சினிமா தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை