August 11, 2020 Tuesday 04.18 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 28 2019 8:20 AM

டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு!

Posted Date : Sep 28 2019 8:20 AM

டிஎன்பிஎஸ்சியின் க்ரூப் 2, 2ஏ தேர்வுகள் குறித்த புதிய அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வில் பொதுத்தமிழ் பாடம் நீக்கப்பட்டது விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:

டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள தொகுதி-2 முதனிலை தேர்வில் பொதுத் தமிழ் தாள் நீக்கப்பட்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்கள், முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் என தமிழ் சார்ந்த பகுதிகள் இத்தேர்வுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்கள், தமிழைப் படிக்காதவர்கள் இனி வெற்றி பெற முடியாது என்ற நிலையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக மாணவர்களுக்குச் சாதகமானதாக அமையும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பாராட்டுகள்... தமிழ் வாழ்க!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Comments Here

  • Azhagesan Sep 28,2019 | 11:36 AM

    Super very good sir

  • Azhagesan Sep 28,2019 | 11:36 AM

    Super very good sir