January 25, 2020 Saturday 12.43 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 28 2019 4:46 PM

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இரு பேராசிரியர்கள் மீது தேனி கல்லூரி முதல்வர் காவல்நிலையத்தில் புகார்!

Posted Date : Sep 28 2019 4:46 PM

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்க கூடிய உதித் சூர்யா வழக்கில் தற்போது திடீர் திருப்பமாக, உதித் சூர்யாவுக்கு உதவியதாக 2 பேராசிரியர்கள் மீது மருத்துவக் கல்லூரி முதல்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ மாணவர் உதித் சூர்யா முறைகேடு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய திருப்பமாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதில் ஆள்மாறட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யாவுக்கு உதவியாக கல்லூரி பேராசிரியர்கள் வேல்முருகன் மற்றும் திருவேங்கடம் ஆகிய இருவரும் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்திருப்பதாக கூறியுள்ளார். 

இந்த புகார் குறித்து கண்டமனூர் விலக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் அடிப்படையில் பல புதிய புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதேபோன்று வேறு மாணவர்கள் யாரும் சேர்ந்திருக்கிறார்களா?, அவர்களுக்கு வேறு யாரும் உதவி செய்தார்களா? என்பது குறித்து தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை