November 12, 2019 Tuesday 03.38 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 1 2019 10:51 AM

விஜயுடன் கைகோர்த்த விஜய் சேதுபதி!

Posted Date : Oct 1 2019 10:51 AM

விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று ‘தளபதி 64’ படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அட்லீயின் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவரும் திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் இவ்வருட தீபாவளி ரிலீசாக வெளியாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் குறித்த பிற அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. 

இந்த நிலையில் முதல் அறிவிப்பாக விஜய்யுடன் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தகவலைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை