November 12, 2019 Tuesday 03.29 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 3 2019 1:18 PM

மோடி - சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

Posted Date : Oct 3 2019 1:18 PM

மாமல்லபுரத்தில் மோடி - சீன அதிபரை வரவேற்று அரசு சார்பில் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை நடைபெறுகிறது.  இந்த சந்திப்பையொட்டி, தலைவர்களை வரவேற்கும் வகையில் பேனர்களை வைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்ததைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. எனவே, மாமல்லபுரம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி பேனர் வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பேனர் வைக்க அனுமதி வழங்கியுள்ளது. அரசு சார்பில் பேனர் வைத்துக்கொள்ளலாம் என்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பேனர் வைக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Comments Here

  • Paneer Selvam Oct 04,2019 | 08:10 AM

    அரசு சார்பில் வைத்தாலும் கட்சி சார்பில் வைத்தாலும் பேனர் விழுந்தால் விபத்தின் தன்மை ஒன்றாகத்தானே இருக்கும். இது பேனர் கலாச்சாரத்தை ஒழிக்காது வளர்க்கும் முயற்சி.. கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

  • Loganathan Oct 03,2019 | 06:31 PM

    பிழை நீதியில் பிழைக்கும் கோழைகள் நீதிக்கு பதியானதன் விளைவே இது.