January 23, 2020 Thursday 07.36 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 3 2019 3:34 PM

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எப்போது எண்ணப்படும்? - சென்னை உயர்நீதிமன்றம் தகவல்!

Posted Date : Oct 3 2019 3:34 PM

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் 15-ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. இதில்  நாசர், விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின. இதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக இருவேறு நீதிபதிகளிடம் இருந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதி கல்யாண சுந்தரம் முன் பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி இந்த வழக்குகள் இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலுக்கு தடை கோரியும், தேர்தலை ரத்து செய்ய கோரியும் மனுத்தாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமீன் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு நடிகர் சங்க தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விடாமல் தொடர்ந்து வழக்கில் கால அவகாசம் கோரி வருவதாகவும், தற்போது வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமீன் தரப்பினருக்கு அவகாசம் வழங்கும் வகையில் வழக்கை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி கல்யாண சுந்தரம், அன்று அவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைத்தாலும், இல்லாவிட்டாலும், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை