December 13, 2019 Friday 02.44 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 4 2019 11:20 AM

அறிமுக டெஸ்ட்டிலேயே இரட்டை சதம் அடித்து மயங்க் அகர்வால் அசத்தல்!

Posted Date : Oct 4 2019 11:20 AM

இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் 204 பந்துகளில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மாவின் சதம் (176 ரன்கள்), மயங்க் அகர்வாலின் இரட்டை சதம் (215 ரன்கள்) ஆகியோரின் பங்களிப்பால் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 136 ஓவர்களில் 502 ரன்கள் குவித்து இருந்தது. ஜடேஜாவும் (30 ரன்கள்), அஷ்வினும் (1 ரன்) களத்தில் இருந்தனர். அப்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி, துவக்கத்திலேயே தடுமாறியது. அஷ்வின் மற்றும் ஜடேஜா சுழலை சமாளிக்க தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடும் சிரமப்பட்டனர். 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

இதில் தன் முதல் டெஸ்ட் சதத்தையே இரட்டைச் சதமாக மாற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் மயங்க் அகர்வால் இணைந்துள்ளார்.

1965ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக மும்பையில் திலிப் சர்தேசாய் 200 நாட் அவுட் என்று முதல் டெஸ்ட் சதத்தை இரட்டைச் சதமாக மாற்றினார். விநோத் காம்ப்ளி 1993ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் 224 ரன்கள் என்று சதத்தை இரட்டையாக மாற்றினார். அதே போல் கருண் நாயரும் சென்னையில் தன் முதல் டெஸ்ட் சதத்தை இன்னும் ஒரு படிமேலே போய் முச்சதமாக மாற்றியுள்ளார்.

இந்த பட்டியலில் மயங்க் அகர்வால் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெறும் 204 பந்துகளை இரட்டை சதம் அடித்து அணியின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை