December 13, 2019 Friday 02.22 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 4 2019 11:30 AM

பிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா காவல்நிலையத்தில் புகார்!

Posted Date : Oct 4 2019 11:30 AM

இசையமைப்பதற்கு இடையூறு செய்வதாக பிரசாத் ஸ்டுடியோ ஊழியர்கள் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இளைய ராஜா சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்து இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இளையராஜா அந்த ஸ்டுடியோவில் வைத்து திரைப்படங்களுக்கான ஒலிப்பதிவு (ரெக்கார்டிங்) பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் இளையராஜா தனது உதவியாளர் கஃபார் மூலம் தபாலில் புகார் ஒன்றை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்.

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

இளையராஜா இசை அமைப்பு பணிகளை செய்யும்போது, ஸ்டுடியோ ஊழியர்கள் சிலர் வேண்டுமென்றே இடையூறு செய்யும் நோக்கில் செயல்படுகின்றனர். மேஜைகள், கணினிகள் போன்ற அலுவலக பொருட்களை ரெக்கார்டிங் ஸ்டுடியோ அருகிலேயே வைத்து வழியை அடைகின்றனர். 

இங்கு வைக்கப்பட்டுள்ள இசைக் கருவிகளுக்கு சேதம் ஏற்படுத்தும் நோக்கிலும், ரெக்கார்டிங் ஸ்டுடியோவை ஆக்கிரமிக்கும் நோக்கிலும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செயல் படுகின்றனர்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரை பெற்றுக்கொண்ட விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை