June 03, 2020 Wednesday 08.18 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 4 2019 6:20 AM

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

Posted Date : Oct 4 2019 6:20 AM

சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

2016 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பாக அப்பாவு போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக இன்பதுரை போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளும், அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக அப்போது குற்றம் சாட்டிய அப்பாவு இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார் அப்பாவு. அம்மனுவில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் அப்பாவு கோரிக்கையை ஏற்று தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கையை 4 ஆம் தேதி(இன்று) நடத்த உத்தரவிட்டது. 

நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ராதாபுரம் தொகுதி தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் மாற்றம் ஏற்பட்டால் திமுகவின் அப்பாவு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பார் இல்லாவிட்டால் திமுகவின் இன்பதுரையே எம்.எல்.ஏ.வாக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை