November 12, 2019 Tuesday 04.46 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 4 2019 2:00 PM

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் திருப்பம்: முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

Posted Date : Oct 4 2019 2:00 PM

சென்னை உயர்நீதிமன்றத்தில் எண்ணப்பட்டுவரும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவின் இன்பதுரை உள்ளார். 49 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் அப்பாவு தோல்வி அடைந்திருந்தார். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருப்பதாக அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறுவாக்கு எண்ணிக்கை இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது.

2016 வாக்கு எண்ணிக்கையின்போது ராதாபுரம் தொகுதியில் 262 தபால் வாக்குகள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெற்று பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கெஜட் பதிவு பெற்ற அதிகாரி இல்லை என்று இன்பதுரை தரப்பு வைத்த வாதத்தை ஏற்று 262 தபால் வாக்குகளையும் செல்லாத வாக்குகள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கெஜட் அதிகாரிகள்தான், அவர்களும் சான்றொப்பம் அளிக்கலாம் என்று தெரிவித்தது.

இதனையடுத்து, இன்றைய மறுவாக்கு எண்ணிக்கையில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 262 தபால் வாக்குகளும் எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், சுமார் 230 வாக்குகள் வரை திமுக வேட்பாளர் அப்பாவுக்கே விழுந்துள்ளது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 19,20,21 சுற்றுகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கேட்டு இன்பதுரை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.  விசாரணை முடிவில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க அக்டோபர் 23 வரை இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தாலும் உச்சநீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை முடிவுகள் அறிவிக்கப்படாது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை