July 04, 2020 Saturday 04.36 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 5 2019 5:52 AM

பணத்தை நம்பி நிற்கவில்லை; அதிமுக அரசின் சாதனைகளை சொல்லி பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் - அமைச்சர் தங்கமணி!

Posted Date : Oct 5 2019 5:52 AM

பணத்தை நம்பி நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அலுவலக திறப்பு விழாவுக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:

நாங்குநேரியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணனின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம். ஜெயலலிதா செய்துள்ள சாதனைகளையும், தற்போது தமிழக முதல்வர், துணை முதல்வரின் செயல் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. விவசாயிகளை வாழவைக்க குடிமராமத்து பணிகள் நடந்துள்ளன. மகளிருக்கு இலவச மோட்டார் சைக்கிள், லேப்டாப், விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இப்படி பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதையெல்லாம் மக்களிடம் முன்வைத்து வாக்கு கேட்போம். நாங்கள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. திமுக கூட்டணி கட்சியினர்தான் பணத்தை மையமாகவைத்து நிற்கிறார்கள்.

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழக முதல்வர் இம் மாதம் 13, 14 ஆகிய தேதிகளில் வருகிறார். தொடர்ந்து பிரேமலதா, சரத்குமார், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் வரவுள்ளனர். ஜெயலலிதாவின் சாதனைகள் எங்களுக்கு வெற்றியைத் தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை