July 13, 2020 Monday 08.08 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 6 2019 6:00 AM

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 350 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை!

Posted Date : Oct 6 2019 6:00 AM

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்தது. தென்னாபிரிக்கா அணி 431 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 323 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இறுதி நாளான இன்று 395 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடி வரும் தென்னாபிரிக்கா அணி 96 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதில் இந்திய வீரர் அஸ்வின், டி புரூன் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை அஸ்வின் நிகழ்த்தி உள்ளார். 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை