May 30, 2020 Saturday 01.58 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 9 2019 12:07 PM

தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழப்பு - நிர்வாகம் ஒப்புதல்!

Posted Date : Oct 9 2019 12:07 PM

தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழந்துள்ளது உண்மை தான் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலூர் கிராமத்திலிருந்து காலை 5 மணிக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலை 11 மணியளவில் இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் உடலில் திடீரென அசைவு ஏற்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னரே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். 

காலையில் அழைத்து வந்தபோதே குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியுமென பெற்றோர் வேதனை தெரிவித்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியதில், இந்த மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 995 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித்தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், இவ்விகாரம் குறித்து அம்மருத்துவமனையின் டீன் விளக்கமளித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை டீன் குமுதா லிங்கராஜ் கூறியதாவது:

இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 3% பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மருத்துவ துறையில் இது இயல்பான எண்ணிக்கைதான். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உயிரிழப்பு குறித்த புள்ளி விவரம் மட்டுமே கிடைக்கும். அதன் மூலம் மருத்துவமனையின் தரத்தை தீர்மானிக்க முடியாது. இதுதொடர்பாக வெளியாகும் செய்திகளால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். 

இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி நாகை, திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை