August 02, 2021 Monday 05.51 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 5 2019 6:38 AM

உலகப்புகழ் பெற்ற சோழ சாம்ராஜியத்தின் வரலாறு!!!

Posted Date : Nov 5 2019 6:38 AM

               கி. பிக்கு முன்னர் சோழவம்சம் இருந்ததாக கருதப்படுகிறது. ஆனால் அதற்கு சரியான சான்றுகளில்லை.9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் கரிகால சோழனின் வரலாறுகளே  நமக்கு கிடைத்துள்ளது.
கரிகாலச்சோழன்
              முதன் முதலில் காவேரி ஆற்றுப்பாய்ச்சலை அடைத்து கல்லணையை கட்டி இன்றும்  உலகம் போற்றும் வகையில் அணைகட்டுமான  பணிக்கு முன்னோடியா  திகழ்கிறார்  கரிகாலச்சோழன்.சேர நாட்டையும்,பாண்டிய நாட்டையும் ஒரு காலத்தில் தனது படையால் மிரட்டியவர்  தான் கரிகாலச்சோழன்.            அவருக்கு பிறகு சோழ வம்சம் அவ்வளவாக தலைத் தூக்கவில்லை.ஆங்காங்கே சில சிற்றரசர்கள் மட்டுமே ஆண்டு வந்தார்கள்.அவர்கள் உறையூர்,பழையாறு போன்ற பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள்.
 விஜயசோழன்           
           கிபி 830-840 ஆகிய ஆண்டுகளின் பல்லவர்கள் சோழர்களின் பல பகுதியை ஆட்சிசெய்திருக்கிறார்கள்.அவர்களில் ஒரு மன்னர் களப்பிரயர்களின் போர் தொந்தரவை தாங்க முடியாமல் தவித்து கொண்டிருந்தார்.அப்போது விஜயசோழன் சிற்றரசனாய் ஆண்டு வந்தார்.அவரை   நட்புறவாக்கி கொண்டு அதாவது பல்லவ ஆட்சிக்கு கீழ் நடக்கும் சோழ ஆட்சியை போலவே நடந்தி வந்தார்.
          கி.பி 848 ஆம் ஆண்டு களப்பிரயர்களை எதிர்த்து போரில் வென்ற விஜய சோழன் தனக்கு அடைக்கலம் கொடுத்த பல்லவ சாம்ராஜ்யத்தை எதிர்த்து போரிட்டு வென்று சோழ சாம்ராஜ்யத்தை காவேரிப்  பூம்பட்டினத்தில் துவக்கி வைத்தார்.அவரின் ஆட்சியில் பலப்  போர்கள் நடத்தப்பட்டு ஏதோ சொல்லும் அளவிற்கு சோழப்பேரரசு  விரிவானது.
         அவருக்கு பின்னால் வந்த முதலாம் ஆதித்த சோழன் தன்னால் முடிந்தவரை  பிறப்போரில் சோழநாட்டை காப்பாற்றி ஆண்டு வந்தார்.


  பராந்தகச் சோழன்
     கி.பி 907ல் வந்த பராந்தகச் சோழன் இவரின் ஆட்சியிலையே சோழரின் புலிக்கொடி நாடு விட்டு நாடு பறக்க துவங்கியது. இவருக்கு முதல் எதிரி பாண்டியர்கள் தான்.பாண்டிய மன்னர் ஒருவர் இவரிடம் தோற்கப் பயந்து இலங்கையில் செங்கோலையும் கிரீடத்தையும் ஈழ மன்னவர்களிடம் குடுத்து விட்டு  தன்னைக்  காப்பாற்றிக் கொள்ள தப்பித்துவிட்டார்.எவ்வளவோ முயற்சித்தும் கீரிடத்தையும்,செங்கோலையும் பராந்தகனால் கண்டு பிடிக்க முடியவில்லை.முதலாம் பராந்தகன் சோழ மன்னர்களில் தனக்கென தனிப்புகழைச்  சுமந்து  நிற்கிறான்.
                
ஆதித்தகரிகாலன்
       சோழ வம்சத்தில் பராந்தகனுக்கு பிறகு சுந்தரச் சோழன் ஆட்சிக்கு வந்தார்.சுந்தர சோழனின் இரண்டு மனைவிகளில் முதல் மனைவிக்கு பிறந்தவன் ஆதித்தகரிகாலன்,இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் குந்தகை,அருள்மொழி வர்மன்.நான் முன்னரே சொன்னது போல்இப்போது சோழவம்சத்தை ஆளுவது சுந்தர சோழன்.சுந்தர சோழன்  நல்ல சிவபக்தி உடையவர்.
அவர் பாண்டிய நாட்டை எதிர்த்து போரிட வேண்டுமென நினைப்பது மட்டும் தான் அவர் வேலை.மத்தபடி எல்லா வேலைகளையும் ஆதித்த கரிகாலன் பார்த்துகொள்வார்.போர்களத்தில் இறங்கிவிட்டால் தீரனாக மாறி விடுவார்.ஒரு முறை பாண்டிய மன்னனை கொன்று அவன் தலையை பழையூரின் கோபுரத்திற்கு முன்பே இருந்த மரத்தில் தொங்கவிட்டார்.அப்படிப்பட்ட வீரனை சில சூட்சம கிருமிகள் கோழைத்தனமாக கொன்றிருக்கிறார்கள்.சதியின் கொடூரம் யாரை விட்டது. தன் வீர மகன் இறப்பை எண்ணி எண்ணி வருந்திய உத்தமசோழனும் கொஞ்ச நாளில் உயிரிழந்தார்.அவரின் இறப்புக்கு பின் சோழ வம்சத்தின் மாபெரும் கதாநாயகன் அருண்மொழி வர்மனெனும் ராஜராஜ சோழன் அரசனானார்.
 ராஜராஜ சோழன்     
       அப்போதே சோழவம்சத்திற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.சிறு வயதிலேயே புராணத்தையும் போர் கலையையும் நன்கு கற்று தெளிந்த நல் வீரர் ராஜ ராஜன்.இவரின் ஆட்சியில் உறையூரை தலைநகராக முதலில் கொண்டிருந்த சோழ அரசின் மண்டத்தை தஞ்சையில் மாற்றினான்.ஆம் கங்கை நதி நீர் கரையில் மாளிகை கட்டி அதன் இனிமையை ரசிக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்.ராஜ ராஜன் தனது நாட்டை சுற்றியுள்ள ஒவ்வொரு அரசையும் வென்று குவிக்க துடித்தான்.முதலில் பாண்டிய மன்னர்களை போரில் வென்று மதுரையை கைப்பற்றினார்.பிறகு தனது வணிக பரப்பை அதிகப்படுத்த விரும்பிய  சேர நாட்டிடம் போர் புரியத் துணிந்தார்.அதற்கு முன் அங்கு ஒரு ஒற்றனை அனுப்பி சமாதானம் பேச சொன்னார்.ஆனால் அவர்களோ ஒற்றனை சிறைபிடித்து கொடுமைப்படுத்தினர்.இதனை கேள்விபட்ட அருண்மொழிவர்மனுக்கு கோபம் தலைக்கேறி தனது மகனான ராஜேந்திர சோழனை உடனே அந்த நாட்டை வென்று சூரையாடிவிட்டுவா… என வழி அனுப்பினார்.சேர நாட்டை அதாவது தற்போதைய கேரளாவை காந்தளுர் சாலையில் நடைப்பற்ற போரில் வென்றார்  ராஜ ராஜன்.குடகுமலை,உதகை போன்ற பகுதிகளையும் வென்று குவித்து புலிக்கு பிறந்தது புலி தான் என பல போரில் வெல்ல அப்பாவிற்கு உறுதுணையாக நின்றார் ராஜேந்திர சோழன்.ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் புகழ் உலகம் அறிந்ததே…அவருக்கு பின் வந்த அரசர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சோழ  சாம்ராஜ்யத்தை போரில் இழக்க துவங்கினர்.சோழ வம்சத்தின் கடைசி மன்னர் குலோத்துங்க சோழன் ஆவார்.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை